திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12.02.2023-ந் தேதி நடந்த ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தொடர் தீவிர முயற்சியால் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பல சவால்களுக்கிடையே வெளி மாநிலங்களுக்கு சென்று கைது செய்த காவல்துறையினருக்கு இன்று (12.05.2023) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மரு.நா.கண்ணன், இ.கா.ப., வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர்.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விஸ்வேஸ்வரய்யா, காவல் ஆய்வாளர்கள் திரு. சாலமோன் ராஜா, திரு. புகழ், திரு. சுப்பிரமணி, காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. சாபுதீன், திரு. நசுருதீன், தலைமை காவலர்கள் திரு. பழனிவேல், திரு. ஏழுமலை, திரு. சரவணன், முதல் நிலைக் காவலர் திரு. முபாரக், இரண்டாம் நிலை காவலர்கள் திரு. கலையரசன், திரு. குணசேகரன், திரு. நாகராஜ், திரு. பிரசாந்த் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ரகாவல்படைத் தலைவர் முனைவர். C. சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி ரூ.1,00,000/- வழங்கி அவர்களை வெகுவாக பாராட்டினார்.