திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் லாரி பேட்டை அருகே உள்ள கட்டிடத்தின் மாடியில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி (24),மற்றும் அறிவழகன் (27), ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.27,344 மதிப்புள்ள 299 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.14,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















