திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பாஸ்கர் என்பவருக்கு நடுவக்குறிச்சி பகுதியில் ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு பிரான்சிஸ் பாஸ்கர் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மீராள்பானு அவர்கள் தலைமையிலான உதவி ஆய்வாளர் திருமதி. தனலெட்சுமி அவர்கள், தலைமை காவலர் திரு. நாகராஜன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளர் பிரான்சிஸ் பாஸ்கரிடம் 02.02.2023 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 33 இலட்சம் மதிப்புள்ள 22 சென்ட் நிலத்தினை மனு அளித்து ஒரு மாதத்திற்குள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
















