திண்டுக்கல் : திண்டுக்கல் கோவிந்தபுரம் நாயுக்கர் புது 3 வது தெருவை சேர்ந்த சரண்யா வயது (37).இவரது வீட்டில் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் கதவை உடைத்து வீடு புகுந்து ரூ 1.50.000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட நகர் துணை கண்காணிப்பாளர்.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு நகர் காவல் நிலைய ஆய்வாளர்.ராஜசேகர் தலைமையில்,சார்பு ஆய்வாளர். மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர். வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள், ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் இது சம்பந்தமாக சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால்,கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















