திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு மற்றும் போலீசார் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மதுரை வீரன்,மதுசூதன் ஐயப்பன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















