விருதுநகர் : விருதுநகர் சாத்தூர், பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26), இவருக்கும் (16) வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி கார்த்தி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.















