காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் சரக காவல் அதிகாரிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குனர் (ச & ஒ) திரு. கி. சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் (18.03.2023) அன்று நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வது, காவலர்களின் கோரிக்கைகள், குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான அறிவுரைகளை வழங்கிய சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் அவர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்ட வரவேற்பாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர்களுக்கு போதைப் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் சமூக சீர்கேடுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்
















