ZOOM செயலி பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும். இச்செயலி பாதுகாப்பானது அல்ல. உங்கள் விபரங்கள் திருடப்படலாம். இச்செயலி பயன்படுத்துவதை தவிர்க்கவும். பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட செயலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
வீடியோ கான்ஃபிரன்சிங் செயலியான ‘Zoom’, தனி நபர் பயன்பாட்டிற்கு பாதுகப்பற்றது என்று உள்துறை அமைச்சகத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் (CyCord) அறிவுறுத்தியுள்ளது. தேசிய சைபர்-பாதுகாப்பு நிறுவனமான, கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (CERT-In) இந்த செயலிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் தங்கள், நண்பர்கள் உறவினர்களுடன் பல்வேறு வீடியோ கான்ஃபிரன்சிங் செயலிகள் மூலம் உரையாடி வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் சமீபத்தில் பிரபலமான “ஜீம்”. இந்த செயலியை, அரசு அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் என மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், CERT-In இதேபோன்ற ஆலோசனையை வெளியிட்டதோடு, ஜூம் செயலியின் பாதிப்புகளுக்கு எதிராக எச்சரித்தது. “பாதுகாப்பற்ற சூம் செயலி, சைபர் குற்றவாளிகள் சந்திப்பு விவரங்கள் மற்றும் உரையாடல்கள் போன்ற முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடக்கூடும்” என்று நிறுவனம் கூறியுள்ளது.