
பொன்னேரி அடுத்த பழவேற்காடு குளத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (50) இவர் நேற்று முன்தினம் கலையரசி, அபிராமி, செல்வி, ஆகிய மூன்று மகளுடன் பழவேற்காடு எட மணி குப்பத்தில் உள்ள தனது வீட்டை பார்க்கும்படியாக சென்றபோது வீட்டின் அருகிலுள்ள எடமணி குப்பத்தை சேர்ந்த நித்தியானந்தம்,கற்பகம், யாகசலம்,ஆகியோர்கள் தனது மகள்களை வழி மறித்து முன் விரோதம் காரணமாக ஊருட்டு கட்டை மற்றும் கையால் அடித்து இதில் பலத்த காயம்பட்ட கலையரசி என்பவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் வடுவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தம் யாகாசலம் கற்பகம் என்பவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து நமது நிருபர்கள் J.மில்டன் மற்றும் J. தினகரன்