சென்னை : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ். கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
சென்னை சைபர் க்ரைம் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரம்யா பாரதி,IPS டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி.பொன்னி,IPS டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக டிஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி சிபிஐ காவல் கண்காணிப்பாளர் திருமதி.சோனல் சந்திரா,IPS பதவி உயர்வு பெற்ற மத்திய அரசு பணியில் பணியைத் தொடர உள்ளார்.
சென்னை சிபிசிஐடி டிஐஜி திரு.ரூபேஷ்குமார் மீனா,IPS திண்டுக்கல் சரக டிஐஜி ஆகவும்,
வேலூர் சரக உள்ளடிஐஜி திரு.A.G.பாபு,IPS அவர்கள் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராகவும்,
சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி திருமதி.ஆனி விஜயா,IPS வேலூர் சரக டிஐஜி ஆகவும்,
சென்னை போலீஸ் பயிற்சி டிஐஜி திருமதி.கயல்விழி,IPS தஞ்சை சரக டிஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயுதப்படை டிஐஜி எஜில்ரசானே ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடர உள்ளார்.
சென்னை அமலாக்கப் பிரிவு டிஐஜி திருமதி.செந்தில்குமாரி ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும்,
சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் திரு.A.T.துரை குமார்,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று, நெல்லை காவல் ஆணையர் பதவி ஏற்க உள்ளார்.
சேலம் சரக டிஐஜி திருமதி.மகேஸ்வரி,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக ,
சென்னை நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி திருமதி.ஆசை அம்மாள்,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று, அதே பணியிலும் சென்னை டிஐஜி திருமதி.ராதிகா,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பணியில் தொடர உள்ளார்.
சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி திருமதி.மல்லிகா,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் நலவாழ்வு ஐஜியாகவும்,
சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையர் திருமதி.லலிதா லட்சுமி, IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும்,
திண்டுக்கல் சரக டிஐஜி திருமதி.விஜயகுமாரி,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை செயலாக்கப்பிரிவு ஐஜியாகவும்,
சென்னை ரயில்வே டிஐஜி திருமதி. ஜெய கவுரி,IPS ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை சிபிசிஐடி ஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சரக டிஐஜி திருமதி.காமினி,IPS ஐஜியாக பதவி உயர்வு, பெற்று சென்னை குற்றப்பிரிவு நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை செயலகப் பிரிவு ஐஜி திரு.கபில் குமார்,IPS சரத்கர்,IPS சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும்,
நெல்லை காவல் ஆணையர் திரு.செந்தாமரைக்கண்ணன்,IPS மனித உரிமை இயல் மற்றும் சமூக நீதி பிரிவு ஐஜி ஆகவும்,
திருப்பூர் காவல் ஆணையர் திருமதி.வனிதா,IPS ஊர் காவல் படை பிரிவு ஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் திரு.மகேந்திர குமார் ரத்தோட்,IPS மாநில மனித உரிமை ஆணையத்தின் ஐஜி ஆகவும்,
அந்தப் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாந்தி,IPS சென்னை போலீஸ் நிர்வாகப் பிரிவு ஐஜி ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ் குமார்,IPS அமலாக்கத்துறை உதவி ஐஜியாகவும், அந்த பொறுப்பில் இருந்த திரு.வேதரத்தினம், சென்னை சைபர் அரங்கம் காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.