திருவாரூர் : நீடாமங்கலம் காவல் சரகம் நீடாமங்கலம் கடைத்தெருவில் இன்று (20.12.2021) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆறு மாத கைக்குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் நின்றுகொண்டிருந்த
பெண்ணை நீடாமங்கலம் ரோந்து காவலர்கள் மீட்டு அப்பெண்ணைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் பெயர் திருமதி.ஹேமா 28 எனவும், அப்பெண் பேருந்தில் ஏறி வழிதவறி நீடாமங்கலத்தில் இறங்கியதும் தெரியவந்தது. பின்னர் கணவர் மணிகண்டனுக்கு காவலர்கள் தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
காவல் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்ட நீடாமங்கலம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் பாராட்டினார்கள்.