தேனி மாவட்டம் : மாநில அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டி சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ARM WRESTLING 80 &75 கிலோ எடை பிரிவில் தேனி மாவட்ட காவல் துறை சார்பில் கலந்து கொண்ட திருமதி.B.ராஜேஸ்வரி(GrI-154- சின்னமனூர் காவல் நிலையம்), திருமதி.R.அனிதா (GrI-474-கூடலூர் வடக்கு காவல் நிலையம்) ஆகியோர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தையும் மற்றும் கபடி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும், ஆண்கள் WRESTLING பிரிவில் திரு.K.முரளி(GrI-174- கம்பம் தெற்கு காவல் நிலையம் ) மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கத்தையும் வென்றார்கள்.
இவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் விதமாக வெற்றி பெற்ற காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.