அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள் முன்னிலையில் 06.10.2020 அன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. செல்வராசு அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை மேலாளர், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும், கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். கனரக வாகனங்களில் தார்ப்பாய்கள் அமைக்காமல் செல்லும் வாகனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மீறி செல்லும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும். விபத்து பகுதியில் புதிதாக வேகத்தடைகள் அமைப்பது, முக்கிய சந்திப்புகளில் ஒளிரும் பட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் மட்டுமே பயணம் செய்வதை உறுதிப்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
உடன் அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.செல்வகுமாரி மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் உடன் இருந்தனர்.