இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் தலைமையில் ஆற்காடு சுற்றுவட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் (FLAG MARCH) நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் துணை இராணுவ படையினர்-70 பேர் மற்றும் காவல் துறையினர்-35 பேர் ஆக மொத்தம்-105 காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் துணை இராணுவ படையினர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்