திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தனசேகரன் வயது 24. இவரை அதே ஊரைச் சேர்ந்த நடேசன் மகன் ரவீந்திரன் என்கிற செட்டியார் வயது 30, சாமி கண்ணு மகன் குமார் வயது 40, சந்திரன் மகன் ரவீந்திரன் என்கிற பல்லு வயது 31, ஆதிமூலம் மகன் சங்கர் வயது 40 ஆகியோர் தனசேகரின் சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாக திட்டியதாகவும் அதை தட்டிக்கேட்ட தனசேகரை அசிங்கமாக பேசி தாக்கியதாகவும் இதைக் கேட்க வந்த தனசேகரின் சித்தப்பா மணி, சித்தி அலமேலு, மச்சான் ரவி ஆகியோரை கடுமையாக தாக்கி அவர்களுடைய இருசக்கர வாகனம், LED TV போன்றவற்றை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களின் தலைமையிலான வேட்டவலம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.