திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் (21.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், புலன் விசாரணை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நீதி மன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தும், நீதிமன்ற பிடிக்கட்டளை நிலுவை குறித்தும், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அரசு அனுமதியின்றி சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தும், ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும், அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இருப்பதால் விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்கள் குறித்தும், ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகள் குறித்தும், காவல்துறையின் உரிய அனுமதி பெற்று, விதிகளுக்கு உட்பட்டு சிலைகள் அமைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் , M.Sc, (Agri)., அவர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.