திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கொலை, கொள்ளை, அடிதடி, ரௌடிசம், திருட்டு வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் lottery விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், எதிர்வரும் (27.08.2025)-ந் தேதி வினாயகர் சதுர்த்தி தினம் என்பதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வாகன விபத்தை குறைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவசியம் தலைகவசம் அணிதல், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்வதை உறுதி செய்யவேண்டும் எனவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.
மாவட்டத்தில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும், அறிவுறுத்தினார்கள். மேலும் கடந்த மாதம் சிறப்பாக பணி செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்.