திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் (19.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு.V.அருள்செல்வன் அவர்கள் உடனிருந்தார்கள்.