திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக – மனித நேய வார விழா நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri).,அவர்கள் தலைமையில், இன்று (29.01.2024) புலிவலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைவரும் ஜாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் பழகி, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறினார்கள். மேலும், பள்ளி மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்கள். போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சைபர் குற்றங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவ, மாணவவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் திருமதி.N.A.சங்கீதா, உதவி இயக்குநர் குற்ற வழக்குகள் தொடர்புதுறை அதிகாரி திரு.A.கோவிந்தராஜூ, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.சரவணன் மற்றும் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தார்கள்.