திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, Agri)., அவர்கள் தலைமையில், (10.07.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள். அப்போது, குற்றவாளிகளின் விபரங்களை சேகரித்து, தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார்கள்.
குற்றவாளிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.T.ஈஸ்வரன் அவர்கள் உடனிருந்தார்கள்.