திருவாரூர்: மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி காவல்துறையில் இல்லாத தனியார் வாகனங்களுக்கு POLICE என ஸ்டிக்கர்களை பைக் மற்றும் கார்களில் ஒட்டி, வாகனத்தை ஓட்டுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)* அவர்களின் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டு போலியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்களை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.