திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், கல்யாணமகாதேவி, மேலத்தெருவை சேர்ந்த பாலசந்திரன் மகன் சிவா @ சிவராஜன் (வயது -26). மற்றும் கட்டளை அன்னவாசல் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சந்தோஷ் (வயது-20). ஆகியோர் சேர்ந்து கமலாபுரம் கடைத்தெருவில் குடிபோதையில் ஒரு பிளாக்ஸ் கடையில், பிளாக்ஸ் ஆர்டர் கொடுத்து உடனடியாக வேண்டும் என கேட்டுள்ளார்கள், கடைக்காரர் ஒருமணி நேரம் ஆகும் என தெரிவித்ததால், பிரச்சனை செய்துள்ளனர். அப்போது சமாதானம் செய்தவரை அரிவாளை கொண்டு தாக்கி, அருகிலிருந்த கடைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.