சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட வீரவலசை விலக்கு அருகில் கடந்த (08.09.2023)ம் தேதி அன்று அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அரசு பேருந்தை வழிமறித்து, பணியில் இருந்த நடத்துனரிடம் அரிவாளால் மிரட்டி டிக்கெட் மற்றும் டிக்கெட் பணம் ஆகியவற்றை பறித்து சென்றது மற்றும் வண்டவாசியைச்சேர்ந்த ஜெயபால் என்பவர் இருசக்கர வாகனத்தில் கரும்பாவூர் விலக்கு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றது தொடர்பாக சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ஆவரங்காட்டைச்சேர்ந்த மோகன் என்பவரது மகன் அஜய்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் தேடி வரப்படுகிறது. விரைவில் கைது செய்யப்படுவார்கள்.மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அரவிந்த் இ.கா.ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி