தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா பட்டீஸ்வரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாத்தி ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் (17-7-2023 ) இரவு இரு சக்கர வாகனத்தில் தனியாக வந்த நபரிடம் செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடிய நபர்களை பற்றி வந்த புகாரின் அடிப்படையில் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை இனம் கண்டு கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ் ராவத் ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் டி.பி.எஸ், அவர்கள் மேற்பார்வையில் தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. கவிதா தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, சண்முகசுந்தரம், ஜனார்த்தனன், ஆகிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள் இதனை தொடர்ந்து இவ்வழிப்பறியில் ஈடுபட்டது பட்டீஸ்வரம் காவல் சரகம் கொர்க்கை அருகிலுள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்த அம்மாவாசை மகன் அஜய்குமார் (21), மற்றும் ஜீவானந்தம் மகன் பரத்குமார் (16), என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்நபர்களை (19-7-2023) பிடித்து அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட ரூ.20,000/- மதிப்புடைய செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் (பல்சர்) ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு. அவர்களிடம் பட்டீஸ்வரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்