விழுப்புரம்: வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தீபக் சிவாச் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையின் சார்பாக இன்று பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்கு பதிவு செய்வதை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுனில் அவர்களின் முன்னிலையில் மரக்காணம் காவல் ஆய்வாளர் திரு. பாபு மற்றும் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் திரு.சக்தி, மத்திய பாதுகாப்பு படை DSP திரு. ராவத், ஆய்வாளர் திரு. ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரோபதி அம்மன் கோவிலில் இருந்து துவங்கி மரக்காணம் காவல் நிலையத்தில் முடிவுற்றது. இதேபோல் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்திராயன் குப்பத்தில் துவங்கி கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் கொடி அணிவகுப்பு நிறைவு பெற்றது.