திருவாரூர் : டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)* அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் (05.12.2023) திருவாரூர் புகைவண்டி நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவாரூர் மாவட்ட காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)* அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்