திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் நடைபெறவுள்ள RSS ஊர்வலம் மற்றும் பொது கூட்டம் (19.11.2023) நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 05-காவல் துணை கண்காணிப்பாளர்கள், 16-காவல் ஆய்வாளர்கள், 62-காவல் உதவி ஆய்வாளர்கள், 352-காவலர்கள் மற்றும் 65-ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள்நேரில் ஆய்வு செய்து தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.