திருவாரூர் : வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்க, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்களின் உத்தரவின் பேரில், மாநில பேரிடர் மீட்பு (SDRF) குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்கும் பொருட்டு திருவாரூர் தலைமையிடத்தில் மூன்று குழுக்களும், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு தலா ஒரு குழுவும் (கூடுதல் 08 குழுக்கள்) அமைக்கப்பட்டு மாநில பேரிடர் மீட்பு (SDRF) குழுவினரால் பயிற்சி பெற்றகாவலர்களை நியமித்து,அந்த பேரிடர் மீட்பு குழுவுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள்
இன்று (15.11.2023) ஆய்வு மேற்கொண்டார்கள்.