தென்காசி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2023ஆம் ஆண்டிற்கான விருதினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எ.தா.சாம்சன், இ.கா.ப. அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.