திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (14 2 2024) புதன்கிழமை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீவு கூட்டத்தில் காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத இரண்டு மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 28 மனுதாரர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு அவரவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்