திருவாரூர் : தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் படி (24 .10 .2023) ,(25. 10 .2023 )ஆகிய இரு தினங்கள் பள்ளி கல்லூரிகள் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை பான் மசாலா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக சிறப்பு வேட்டை திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த வேட்டையில் மொத்தம் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் திருவாரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிரான வேட்டைகள் தொடர்ந்து நடைபெறும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்