இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் Heartfullness தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வுநிலை பயிற்சி, அளிக்கப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.பா., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த தியான பயிற்சி வகுப்பில் Heartfulness தியான அமைப்பினர் மூலம் காவல்துறைஅதிகாரிகளுக்கு அன்றாட மன அழுத்தம் போக்கும் வகையிலும் எதிர்மறை எண்ணங்கள் இருந்து நேர்மறை எண்ணங்களாக மாற்றும் வழிமுறைகளும், அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறையினரும் நாள்தோறும் இதை கடைப்பிடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் மன நிம்மதியாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டனர். இந்த தியான பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமால்(இராணிப்பேட்டை உட்கோட்டம்) திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.ராமச்சந்திரன் (DCRB),மாநில Heartfullness ஒருங்கிணைப்பாளர் S.பிரகாஷ் , வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் N.லட்சுமி நாராயணன்,இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.M சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.