திருவாரூர் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி (28.08.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்கள். அப்போது, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தார்கள்.