பழநியில் ரயில்வே போலீஸ் சார்பில் ரயில் நிலைய வளாகத்திற்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர்கள். குதிரைவண்டி ஓட்டு நர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ரயில்வே எஸ்ஐ மகேஷ்வரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஐயப்பபக்தர்கள் சீசன் என்பதால்
பொது இடங்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந் தால் உடனடியாக போலீசிற்கு தகவல் கொடுக்க
வேண்டும். குழந்தைகள் தனியாக சுற்றித்திரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அரசின் கொரோனா விதிமுறைகளை கடை பிடித்து பயணிகளை தங்களது வாகனங்களில் அழைத்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. ஆட்டோ டிரைவர்கள் மற்றும் குதிரை வண்டி ஓட்டுநர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா