பெரம்பலூர் :குற்றங்களை குறைக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் புகார்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க, பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகின்றனர். இதன் ஒரு கட்டமாக பெரம்பலூரில் RACE என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, நேற்று முதல் செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் பெரம்பலூர் போலீஸார்.
திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையத்திலும் RACE என்று அழைக்கப்படும் RAPID ACTION FOR COMMUNITY EMERGENCY என்ற பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த RACE பிரிவானது மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற நிகழ்வுகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 04328-225085 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிப்பது மூலம் மேற்படி RACE குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். RACE குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.