தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 22 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 25.02.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் உள்ளது.
மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 24.02.2022 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் அன்றைய (24.02.2022) தினமே ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூபாய். 1000/- மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- மும் முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு ரூ.12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 9443382974, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.