திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வடமாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் Police News+ ஊடகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (31.10.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளியின் ஆங்கில வழிக் கல்வி பிரிவு மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் நடுதல், அவற்றை பராமரிப்பதின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரைகள் நிகழ்வின் போது வலங்கப்பட்டன. இந்நிகழ்வின் மூலம் சிறுவயதிலேயே சுற்றுச்சூழலின் மீதான பொறுப்புணர்வை மாணவர்களிடம் வளர்க்கும் முயற்சியாக இது அமைந்தது.
இந்த நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் தலைமை ஆசிரியர் திரு.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் மொபைல் ரிப்போர்ட்டர் திரு.செல்வராஜ் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
















