கோவை : கோவை தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணி ஆய்வாளர் செல்வராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மதியம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தல் உள்ள அறைக்குச் சென்ற ஆய்வாளர் செல்வராஜ் மின்விசிறியில், லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட சக காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்