மதுரை: மேலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர். அவ்வாறு பாலியல் சீண்டல் நபர்களை பற்றி காவல்துறைக்கு தெரிவிப்பதும். மாணவிகள் ஆபத்து காலங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் பசுமலையில் இன்று (27.02.2020) உள்ள மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்