திருவாரூர் : 3 -வயது சிறுமியை கடந்த 27.05.19 அன்று பாலியல் தாக்குதல் செய்தது தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 28.05.19 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கை விசாரித்த திருவாரூர் மகிளா நீதிமன்றம் மேற்படி குற்றவாளிக்கு இன்று (06.08.21) 10 -ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி விஜயை திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக புலன்விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்ற பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில்
இதுவரை பதிவாகியுள்ள அனைத்து POCSO வழக்குகளிலும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.