திருவள்ளூர் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, பிரபல தமிழ் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவியும், பிரஜோஷ் சாரிட்டியின் நிறுவனருமான டாக்டர்.ஈவ்லின் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்றவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், இனிப்புகள், முகக்கவசங்கள், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவி திருமதி.டாக்டர் ஈவ்லின் அவர்கள், அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் மீது, மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவராக, திருவள்ளூர் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகள் வழங்கி, மக்களிடத்தில் குட்டி அன்னை தெரசா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் அவருடைய அயராத உழைப்பும், மற்றும் அவர் சமூக நலத்தின் மீது, கொண்ட அக்கறை. தியாகத்தின் திருவுருவமாக வாழ்ந்து வரும் திருமதி டாக்டர்.ஈவ்லின் அவர்களுக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் சார்பாகவும், மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாகவும் நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.சக்திவேல் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற மின்துறை அதிகாரி திரு.கிட்டார் சாம், மற்றும் திருவள்ளூர் தமிழ் முரசு பத்திரிகையாளர் திரு.முருகன், பிருத்திவி, அருண், சோபன்ராஜ், திருமதி.ரோஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் திரு.ஸ்டீபன் இதன் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல தலைவி திருமதி. ஈவ்லின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் வெளியிட்டுள்ள பிறந்த நாள் செய்தியில்,
நாம் பிறக்கும் போது
இந்த உலகிற்கு என்ன
கொண்டு வந்தோம்..
பிறருக்கு உதவி செய்தால்
தான் நம் வாழ்வு சிறக்கும்..
உங்கள் பிறந்த நாள் நீங்கள்
பிறந்த நாளாக மட்டும்
இல்லாமல்.. நல்ல செயல்கள்
செய்யும் இனிய நாளாக
மாற்றியமைக்காக
என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மேலும், திருமதி.ஈவ்லின் அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும், பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.