மதுரை: மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.மதுரை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கடந்த ஆண்டு 1550 பதிவேட்டில் உள்ள ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆயிரத்து 204 ரவுடிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 45ரவுடிகளும் , பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 62 ரவுடிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 569 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு அதை மீறிய அறுபத்தி ஆறு ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
ரவுடிகளுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு நடந்த மொத்தம் 35 கொலைகளில் ரவுடிகளுக்கு இடையே யான பழிவாங்கும் கொலையோ அல்லது இனவாத கொலை நடக்கவில்லை குடும்பத்தகராறு சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட சிறு சிறு சண்டைகள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தான் இந்த கொலைகள் நடந்துள்ளன .மேலும் கடந்த ஆண்டு ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு 2020 ஆம் ஆண்டில் பதிவான 733 வழிப்பறி திருட்டு வழக்குகளில் ரூபாய் மூன்றரைகோடி அளவுக்கு சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டது.அதில் 481 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூபாய் 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன ஆனால் 145 பெரும் வழக்குகளில் ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டது அதில் 117 வழக்குகள் கண்டறியப்பட்டு ரூபாய் 90 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டது மேலும் கடந்த ஆண்டு திருடப்பட்டு காணாமல் போன 179 இருசக்கர வாகனங்கள் மற்றும் 500 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் கடந்த ஆண்டு 587 போதைப்பொருட்களான கஞ்சா விற்றவர்கள் மீது 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல் 6 கோடி அபதாரம்
போக்குவரத்து சீராக இயங்கவும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு தடுக்கவும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடந்த ஆண்டில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது நகரின் 2500 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் 11 ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது .இவ்வாறாக 2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகர் காவல்துறை போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சமூக விரோதிகள் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து நகரம் மதுரை மாநகரில் அமைதியான சூழலை உறுதிசெய்துள்ளது .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி