மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து சட்டவிரோதமாக விற்பனை மற்றும் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்த விபத்தை நேரில் ஆய்வு செய்த பின் – மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பேட்டி
இந்த விபத்து தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்., இந்த ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன்., வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருத்த பட்டாசுகள் வெடித்துள்ளது, இதில் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததா? தயாரிக்கப்பட்டதா என நிபுணர்களை வரவழைத்து தொடர் ஆய்வு நடைபெற்று வருகிறது எனவும்,மேலும் மதுரை மாவட்டம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் ஆய்வு செய்து சட்டவிரோத விற்பனை மற்றும் தயாரிப்புகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி