சென்னை: M-1 மாதவரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஸ்ரீதர் (த.கா.26753) மற்றும் முதல்நிலைக் காவலர் சுரேஷ் (மு.நி.கா.29938) ஆகியோர் கடந்த 07.3.2021 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை ராதாகிருஷ்ணன் ஹாஸ்டல் அருகே இருட்டான பகுதியில் மறைந்திருந்த ஒரு நபர் காவலர்களை கண்டதும், வைத்திருந்த பையை போட்டுவிட்டு ஓடினார். உடனே, காவலர்கள் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து, M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து. M-1 மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சுதாகர், வ/24, வேலூர் மாவட்டம் என்பதும் சற்று முன்பு, மாதவரம், பொன்னியம்மன்மேடு, பகுயிலுள்ள ப்ளேவியன் டிக்ரூஸ் என்பவரது வீட்டில் மேற்படி பணம் மற்றும் செல்போன்கள் திருடியதும் ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரி சுதாகர் கைது செய்யப்பட்டார் . அவரிடமிருந்து பணம் ரூ .4,63,000 / – , 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.