மதுரை : மதுவிலக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.இராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் உத்தரவுபடி, மதுரை மாநகர பொதுமக்களுக்கு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை மாநகரில் 24 மணி நேரமும் ரோந்துபணியில் உள்ள 5 டெல்டா வாகனத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு வாசகமான LIFE IS TOO BEAUTIFUL SAY NO TO ALCOHOL என்று அச்சிடப்பட்ட T.SHIRT நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.கார்த்திக்,IPS., அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் மதுரை மாநகரில் டெல்டா வாகனங்கள் ரோந்துபணியின் போது சட்டவிரோதமாக வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மதுவகைகளை விற்பனை செய்த 83 நபர்களை பிடித்து அவர்கள் மீது 83 வழக்குகள் பதிவுசெய்ய உதவியாக இருந்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1471 மது பாட்டில்களும், நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் இரு சக்கர வாகனங்கள் மூன்றும் மற்றும் மது விற்பனைசெய்த பணம் 19230 ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பாக செயல்பட்ட டெல்டா ரோந்து அதிகாரிகளையும் காவல் ஆளிநர்களையும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை