திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் பொதுமக்களுக்கு கணினியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு சைபர் கிரைம் காவல் நிலையத்தை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைத்துள்ளது. இதனடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் Bank frauad, Online cheating,Online Game Cheating,Online Therading, போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கூறினார். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு ராஜேஷ், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திரு ராஜரத்தினம்,மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.