தருமபுரி: தருமபுரி நகரத்தில் குற்றச்செயல்களை தடுக்க 41இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப. அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.
தருமபுரி நகரில் புறநகர் மற்றும் நகர பேருந்து நிலையம் உள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் நகை பறிப்பு, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இந்த கேமராக்களை கண்காணிக்க புறநகர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப. அவர்கள் திறந்து வைத்து இது குறித்து உரையாடலில் கடந்த ஒரு மாத காலமாக பேருந்து நிலைய பகுதியில் தீவிரமாக கண்காணிக்க வாக்கிடாக்கியுடன் கூடிய “பீட் ஆபீஸர் சிஸ்டம்”அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது குற்றங்களை தடுக்கவும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள நவீன சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருக்கும். தற்போது பொருத்தப்பட்டுள்ள 41 சிசிடிவி கேமராக்கள் 41 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது போன்றது என்றார்.
மேலும் இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.வினோத், நகர காவல்நிலைய ஆய்வாளர் திரு.நவாஸ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.சுந்தர மூர்த்தி , திரு.பெருமாள்,திரு.சரவணன், திரு.அண்ணாதுரை , திரு.ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.