இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை பேருந்து நிலைய பகுதியில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலில்யிருந்தும் தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறியும் முக கவசம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உடன் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. முகேஷ் குமார், காவல் ஆய்வாளர் திரு. பார்தசாரதி ஆகியோர்களும் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்