கொலை நடந்த 24 மணி நேரத்தில் எதிரியை கண்டுபிடித்த காவல் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் அளித்து பாராட்டினார்கள்.
05.02.2022 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அலுவலர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் தங்கி கொண்டு அங்குள்ள பணிகளை செய்து வந்த நாகரெத்தினம்(68) என்பவர் கடந்த 19.01.2022 – ஆம் தேதியன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததையெடுத்து நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளாக இரண்டு நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் *திருமதி. லில்லி கிரேஸ்*, நகர காவல் ஆய்வாளர் *திரு. குருநாதன்* மற்றும் அவர்களின் காவல் ஆளிநர்கள், சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் *திரு. மாரிமுத்து* மற்றும் அவர்களின் காவல் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் *திரு .V. பாலகிருஷ்ணன் இ.கா.ப.,* மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,* அவர்கள் நேரடியாக அழைத்து சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினர்கள்.