நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் திருமதி.அமுதா (க.எண் 1159) அவர்களின் மகள் செல்வி. சரண்யா கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமையியல் (UPSC) தேர்வில் அகில இந்திய அளவில் 36 வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சமீபகாலமாக காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண் காவலர்கள் வீட்டையும், நிர்வகித்து காவல் பணியிலும் செயல்படுவது என்பது கடினமான ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் திருமதி.அமுதா காவல் பணியிலும் திறம்பட செயல்பட்டு, அதே நேரத்தில் தன் வீட்டிலும், ஒரு சிறந்த தாயாக இருந்து தன் மகளுக்கு மகளை உற்சாகப்படுத்தி, தேர்வில் வெற்றியும் பெற செய்துள்ளார்.
இவர்களை பாராட்டும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டினார்.
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற தலைமை காவலர் மகள் செல்வி.சரண்யா அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.